மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மாவட்ட வட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என கூறிய தமிழக நிதித்துறை அமைச்சர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் பாபு, வட்டாரச் செயலாளர் சுரேஷ்குமார் துணைத் தலைவர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
