மாவட்ட செய்திகள்
உடுமலை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சித்த மருத்துவ பிரிவில் மூலிகைச்செடிகள் அறிமுகம்:

உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் பல்வேறு மூலிகைச் செடிகளை அறிமுகப்படுத்தும் வகையில் காட்சி படுத்தி உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பூரவள்ளி கறிவேப்பிலை வெற்றிலை வல்லாரை துளசி தூதுவளை என்று ஒவ்வொரு வீட்டிலும் பலவிதமான மூலிகைச் செடிகள் இருந்து வந்தது விஞ்ஞான வளர்ச்சியால் நோய்களைத் தீர்க்க புது புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் அதே நேரத்தில் புதுப்புது நோய்களும் உருவாகிக்கொண்டிருக்கிறது.

அன்றைய பாட்டி வைத்தியத்தில் எந்தவித நோய்களும் குணமானது. சித்த வைத்தியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் பலவிதமான மூலிகைகளை காட்சிப் படுத்தி உள்ளனர். மேலும் மூலிகைகளும் அதன் பெயர் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கிய அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளது இதுகுறித்து சித்த மருத்துவ பிரிவு டாக்டர் லட்சுமி ராஜ் கூறியதாவது.

ஞாபக சக்திக்கு வரலாறு இருமல் இளைப்பு தீர வெற்றிலை சுவையின்மை நீங்கி பசி உண்டாக கறிவேப்பிலை சிறுநீர்க் கற்களைக் கரைக்க ரணகள்ளி என்று ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு மூலிகை உள்ளது எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூலிகைகளை காட்சிப்படுத்தி அறிகிறோம்.

அத்துடன் சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் ஒன்றும் இங்கே செயல்படுகிறது விருப்பப் படுபவர்கள் இந்த புத்தகங்களை படித்து சித்த மருத்துவத்தின் சிறப்புக்களை அறிந்து கொள்ளலாம் என கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
