மாவட்ட செய்திகள்
ஆவடி வட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து சொகுசு கார் மீது விழுந்தது.

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் காற்று மழை என வெளுத்து வாங்கியது இதன் காரணமாக ஆவடி வட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன் இவரது மனைவி இன்று காலை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சம்பந்தமாக வந்துள்ளார்,

காரை நாச்சியப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார், அப்போது வட்டாட்சியர் அலுவலகம் அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே அமர்ந்துள்ளார், வட்டாட்சியர் தடுப்பு சுவர் திடீரென்று காரின் மீது விழுந்து.

இதைக் கண்ட ஓட்டுநர் நாச்சியப்பன் அலறியடித்து காரை விட்டு இறங்கி ஓடினார் தடுப்பு சுவர் காரின் மீது விழுந்து காரின் முன்பக்க கண்ணாடி பின்பக்க கண்ணாடி அனைத்தும் நொறுங்கியது, இதனால் எந்த காயமும் அவருக்கு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
