மாவட்ட செய்திகள்
அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் முன்னே சென்ற ஆட்டோ மீது மோதி கீழே விழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

சென்னை அம்பத்தூர் செங்குன்றம் சாலை ஒரகடம் அருகே காலை உயர்ரக இரு சக்கர வாகனம் ஒன்றை இளைஞர் ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார்.அப்போது முன்னே சென்ற ஆட்டோவை பார்த்ததும் வேகமாக கடக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராதவிதமாக அந்த ஆட்டோவின் பக்கவாட்டில் இளைஞரின் இருசக்கர வாகனம் உரசியதில் சட்டென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இவை அனைத்தையும் வீடியோவாக் ஒருவர் தனது செல்போனில் காட்சி பதிவு செய்துள்ளார் அதில் இளைஞர் அதிகமாக வருவது ஆட்டோ மீது உராய்ந்து தூக்கி வீசப்படும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகின்றன. இதுகுறித்து அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
