மாவட்ட செய்திகள்
உடுமலை மூணாறு சாலையில் இரவில் குட்டிகளுடன் யானைகள் முகாம்! வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் குடிநீருக்காக
அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் உடுமலை மூணாறு சாலை வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது.

இதனால் இவ்வழியே இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடனும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பயணிக்குமாறும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் இரவு நேர பயணங்களை தவிர்க்குமாறு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
