மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவி அதிமுகவை சேர்ந்த சத்யா மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக மாவட்ட கவுன்சிலர்கள் கொண்டுவந்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

மொத்தம் 17 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளனர் இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி அதிமுகவை சேர்ந்த சத்யா உள்ளிட்ட மூன்று மாவட்ட கவுன்சிலர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கு பெறவில்லை
இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 14 மாவட்ட கவுன்சிலர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர் இதைத்தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து சத்யா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை இழந்தார்.

இதைத்தொடர்ந்து இதுகுறித்த தகவல்களை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கும் இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் மாவட்ட பஞ்சாயத்து தலைவி பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி திமுக சார்பில் போட்டியிடக்கூடிய மாவட்ட கவுன்சிலர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
