மாவட்ட செய்திகள்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி அச்சக உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தின் சார்பில்சங்கத்தின் மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அம்மனுவில் அச்சுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள பேப்பர், தினம் தோறும் விலை ஏற்றத்தினால் தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது எனவே விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

அச்சுத் தொழிலின் மூல பொருட்களான கெமிக்கல், பாலிமாஸ்டர், மை போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

தற்போது மத்திய அரசு ஏற்கனவே அச்சுத் தொழிலுக்கு உள்ள ஜிஎஸ்டி வரியை தற்போது அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே 5 % மற்றும் 2 சதவீதமாக இருந்த நிலையில் பழைய முறையை நடைமுறை படுத்த வேண்டும், அச்சக ஊழியர்கென தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
