மாவட்ட செய்திகள்
உலக மகளிர் தினத்தில் பட்டுக்கோட்டையில் நிறைமாத கர்ப்பிணி பெண் 6 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை.
உலக சமாதானத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தில் பட்டுக்கோட்டையில் நிறைமாத கர்ப்பிணி பெண் 6 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை.
உலக சமாதானத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி பெண் ஷீலாதாஸ் (31 வயது) இரட்டை மற்றும் ஒற்றை சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார். முதலில் டாக்டர் லெட்சுமிகார்த்திக்
ஷீலாதாஸை பரிசோதனை செய்தார். அதனைத் தொடர்ந்து சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியை டாக்டர் குணசேகரன் துவக்கி வைத்தார்.
கர்ப்பிணி பெண் ஷீலாதாஸ் முதல் 3 மணி நேரம் தனது 2 கைகளில் சிலம்பம் சுற்றியும், அடுத்த 3 அரை மணி நேரம்
ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றியும் இந்த உலக சாதனையை படைத்துள்ளார். கர்ப்பிணி பெண் ஷூலாதாஸ் சிலம்பம் சுற்றும்போது அனைவரும் கூடிநின்று கைதட்டி ஊக்கப்படுத்தினர்.
உலக சாதனையை நோபல் உலக சாதனை நடுவர் விக்னேஷ் கண்காணித்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர்கள் சதாசிவம், ஸ்ரீதர்பாபு ஆகியோர் உலக சாதனை ப
உலக மகளிர் தினத்தில் உலக சமாதானத்தை வலியுறுத்தி நிறைமாத கர்ப்பிணி பெண்
ஷீலாதாஸ் தொடர்ந்து இடைவிடாது 6 மணி நேரம் இரட்டை மற்றும் ஒற்றை சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்திருப்பது அனைவரின் பாராட்டையும் வெகுவாக பெற்றுள்ளது.