மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி – உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை
திருச்சி மாவட்டம், கல்லக்குடி பகுதியை சேர்ந்த ஆட்சிக்கண்ணு. இவரது மனைவி சுமதி (வயது 37), இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை சுமதி வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு
திரும்பி சென்று கொண்டிருந்தார்.
நெ.1டோல்கேட் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி பேருந்து சுமதி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரின் பின்புறத்தில் வேகமாக மோதியது.
இதனால் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சுமதி மீது கல்லூரி பேருந்து ஏறியது.
இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் கல்லூரி பேருந்துகள் அதிக வேகமாக செல்வதால் அடிக்கடி உயிர் விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறிகின்றானர்.
இந்த மருத்துவக் கல்லூரி மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.