மாவட்ட செய்திகள்
தேனிமாவட்டம் கடமலைக்குண்டு அருகே கடமான் பலி.
தேனிமாவட்டம் கடமலைக்குண்டு அருகே அய்யனார் கோவில் மலைப்பகுதியில் குடிநீருக்காக கடமான் பல மாதங்களாக வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது இந்நிலையில் நேற்றிரவு கடமான் போஸ் என்பவரின் தோட்டத்திற்கு குடிநீருக்காக வந்துள்ளது இதில் இரவு நேரத்தில் நிலைதடுமாறி தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து பலத்த காயமடைந்து இறந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் .
இத்தகவல் அறிந்த பின்பு கண்டமனூர் வனச்சரக அதிகாரிகள் மற்றும் கடமலைக்குண்டு தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து மலைப்பகுதியில் புதைத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு கடமான் வயது இரண்டு எனவும் நிலைதடுமாறி தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்ததால் பரிதாபமாக இறந்துள்ளது மேலும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே சிமெண்ட் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கி வருகிறோம் இதுபோன்ற மானின் பலி எண்ணிக்கையை தடுப்பதற்கு வனத்துறை தீவிர பணியாற்றி வருகிறது என தெரிவித்தனர்.