மாவட்ட செய்திகள்
உக்ரேன் நாட்டிற்கு மேல்படிப்புக்கு சென்று வந்த மாணவியை பாண்டிச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திப்பு.
காரைக்கால் திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த வாசுதேவன்-மலர்விழி மகள் வினோதினி மேல் படிப்பிற்காக உக்ரேன் சென்றிருந்த நிலையில் ஐந்தாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த சூழ்நிலையில் அங்கு ஏற்பட்ட போர் சூழல் காரணமாக புதுடெல்லி வந்தடைந்து நேற்று மாலை காரைக்காலில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தடைந்தார்.
இதை அறிந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாராஜன் துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) எம்.ஆதர்ஷ ஆகியோர் மாணவி வினோதினியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அமைச்சர் மாணவியிடம் எந்த உதவி தேவைப்பட்டாலும் எண்ணையோ அல்லது மாவட்ட நிர்வாகத்தையோ அணுகுமாறு கேட்டுக் கொண்டார்.
CATEGORIES Uncategorized