மாவட்ட செய்திகள்
பள்ளி மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் வீடியோ !

ஈரோடு மாவட்டம் பெரியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வெள்ளை அடிக்க கட்டாய படுத்தி உள்ளார்.
இதையடுத்து மாணவர்கள் பள்ளி வளாகத்தை வெள்ளை அடிப்பதை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சோழங்கபாளையம் பகுதியை சார்ந்தவர் தனலட்சுமி இவர் ஈரோடு மாவட்டத்தில் பெரியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

தனலட்சுமி தான் நிர்வாகிக்கும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளி வளாகத்தை வெள்ளை அடிக்க மாணவர்களை வற்புறுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தனலட்சுமியின் இந்த செயலுக்கு பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கண்டனம் ஏற்பட்டுள்ளது.
