மாவட்ட செய்திகள்
அரசு பேருந்தில் டீசல் திருடிய ஓட்டுநர் !

கோயம்புத்தூர் அருகே பணிமனை பகுதியில் அரசு ஓட்டுனராக பணிபுரியும் பெரியசாமி என்பவர் டீசல் திருடிய குற்றத்திற்காக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
அன்னூர் அரசு போக்குவரத்து கழகம் பணிமனை பகுதியில் நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகளில் இருந்து டீசல் திருடு போவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதனை கண்காணிக்க இரவு நேரங்களில் அப்பகுதியில் அனைத்து பேருந்துகளையும் அரசு ஊழியர்கள் கண்காணித்து வந்தனர் திடீரென இரவு நேரத்தில் 20 லிட்டர் டீசல் கேனுடன் பெரியசாமி பிடிபட்டார்.
20 லிட்டர் கேன் மற்றும் டீசல் பேருந்திலிருந்து எடுப்பதற்காக டியூப் போன்றவைகளை பெரியசாமி இடமிருந்து கைப்பற்றியுள்ளனர் இவர் கையும் காலும் ஆக பிடிபட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
