மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் தலைவர் பதவியை திமுக உறுப்பினர் ராஜாமுகமது ராஜினாமா செய்யக்கோரி போராட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் நகர்மன்றத் தலைவர் பதவி திமுகவிற்கும் நகர்மன்ற துணைத்தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட நிலையில் பெரியகுளம் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை திமுக உறுப்பினர் ராஜாமுகமது தன்னிச்சையாக செயல்பட்டு கைப்பற்றிய நிலையில் இன்று வரை திமுக தலைமை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும்,
ராஜினாமா செய்யாத நிலையில் இன்று விடுதலை சிறுத்தை கட்சிகள் நகர்மன்ற துணைத்தலைவர் பதவியில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் ராஜாமுகமது ராஜினாமா செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட இடத்தை விடுதலை சிறுத்தை கட்சிக்கு வழங்க திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கலைந்து சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.