மாவட்ட செய்திகள்
போச்சம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு – வாலிபர் இறந்த அதிர்ச்சியில் உறவினர்கள் அனைவரும் வெளியே சென்ற நிலையில் தாயை கடத்தி உடுத்தியிருந்த தங்க நகைகள் திருட்டு – போச்சம்பள்ளி அருகே அதிர்ச்சி சம்பவம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் போயர் நகர் என்னுமிடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த சதீஸ் (19) அருன் (21) மற்றும் பரணி (20) ஆகியோர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுள்ளது. வாகனம் தூக்கி வீசப்பட்டத்தில் சதீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற இருவரும் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால் விபத்து நடந்தது தெரியவில்லை.
சற்று நேரம் கழித்து அவ்வழியே சென்றவர்கள் விபத்தை கண்டு மத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த மத்தூர் காவல் துறையினர் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்துபோன சதீஸ் உடலை மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து நடந்ததை அறிந்த உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு வந்துள்ளனர். கண்ணன்டஹள்ளி கிராமத்தில் உள்ள சதீஸ்-ன் தாயார் சாந்தி (46). இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் (சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்) வீட்டில் தனிமையில் விட்டு சென்றுள்ளனர். வீட்டில் யாரும இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத இருவர் இரு சக்கர வாகனத்தல் வந்து சதீஸ் இருக்கும் மருத்துவமனைக்கு உங்களை அழைத்து செல்கிறேன் என கூறி, சாந்தியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகே இருந்த மாந்தோப்பில் வைத்து அவரை பெல்ட்டால் சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த தங்க நகைகளை பிடுங்கி சென்றுள்ளனர். தாலி, தோடு, மூக்குத்தி, செயின் என அனைத்தையும் திருடி சாந்தியை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு நடந்து வந்து சம்பவத்தை கூறவே உறவினர்கள் மீண்டும் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சாந்தியிடம் இருந்து எடுக்கப்பட்ட நகைகளின் விபரங்களை அளிக்க காவல் துறையினரும், உறவினர்களும் முன்வரவில்லை.
மகன் இறந்த துக்கத்தை தாளாமல் இருந்த தாய்க்கு, மேலும் ஒரு திருட்டு சம்பவத்தால் குடும்பமே கதிகலங்கி நின்றுள்ளது. இவர்கள் முன்னால் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் இ.ஜி.சுகவனத்தின் நெருங்கி உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.