மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பதவியேற்ற சில நாட்களிலேயே களமிறங்கி மக்கள் பணி செய்யும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பதவியேற்ற சில நாட்களிலேயே களமிறங்கி மக்கள் பணி செய்யும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர். பொதுமக்கள் பாராட்டு. அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பதவி ஏற்ற சில நாட்களிலேயே பேரூராட்சி தலைவரும் துணைத் தலைவரும் அதிரடியாக களம் இறங்கி மக்கள் பணி செய்து வருவதனை பொதுமக்கள் பாராட்டினர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜேம்ஸ் டவுணில் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்து வந்தது. இது குறித்து பேரூராட்சி துணைத் தலைவர் காந்திராஜனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அவரும் பேரூராட்சித் தலைவர் ஜானகி இளங்கோவும் உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கன்வாடி மையம் பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளின் நலனை கருதி உடனடியாக மாற்று ஏற்பாடு செய்வதற்காக களத்தில் அதிரடியாக இறங்கி செயல்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள லெட்சுமிபுரம் கிராமத்தில் ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி அதிகாரி ஆதித்தன் என்பவரை தொடர்பு கொண்டு அவரது காலியாக உள்ள அனைத்து வசதிகளும் அடங்கிய வீட்டில் வைத்து இன்று முதல் அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுத்தனர். ஜேம்ஸ் டவுணில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படும் வரை இந்த இடத்தில் வைத்து நடைபெறும் என கூறினர். மேலும் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி குழந்தைகளை மகிழ்ச்சி படுத்தினார். பதவியேற்று சில நாட்களிலேயே அதிரடியாக களம் இறங்கி தலைவர் மற்றும் துணைத்தலைவர் மக்கள் பணிகளை செய்து வருவதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.