மாவட்ட செய்திகள்
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் வேட்டி சேலை புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் சுபாஷினிபிரியாகதிரேசன் துணைத் தலைவர் முருகேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தாமிரபட்டரை தொழிலாளர்களுக்கு வேட்டி சேலை புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாசினிபிரியா கதிரேசன் மற்றும் துணைத் தலைவர் SP. முருகேசன் ஆகியோர் , அனைத்து திமுக வார்டு உறுப்பினர்களுடன் நிலக்கோட்டை தாமிரம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் ,விக்ரகங்கள் செய்யும் பட்டரைத் தொழிவாளர்களின் குடும்பங்கள் வசித்துவரும் சேர்மன் பஜார் பகுதிக்கு சென்று ” தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் வேட்டி, சேலை, சட்டை, கால்சட்டை உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தாடை தொகுப்புகளை வழங்கினர் . மேலும் அணைத்து குடும்பங்களுக்கு இனிப்புகள் அடங்கிய பெட்டிகளும் வழங்கப்பட்டன.
மேலும் சேர்மன் பஜார் பகுதியில் உள்ள அனைத்து அடிப்படை பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தனர் இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் நகர துணை செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 10-ற்கும் மேற்பட்டோர் திமுக-வில் இணைந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.