மாவட்ட செய்திகள்
கூட்டாட்சி நடைமுறையை ஏற்றுக்கொள்கிற அரசியல் சட்டத்தை வகுப்போம் பாஜகவுக்கு மாற்று அணியாக இருக்கும் பழ.நெடுமாறன் பேட்டி.

கூட்டாட்சி நடைமுறையை ஏற்றுக்கொள்கிற அரசியல் சட்டத்தை வகுப்போம் என்ற சட்டத்தை எல்லா மாநில அரசுகளும் முன்வைத்து ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் – அதுதான் பாஜகவுக்கு மாற்று அணியாக இருக்கும் – திருச்சியில் பழ.நெடுமாறன் பேட்டி
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் பொதுச்செயலாளர் அங்கயற்கண்ணி தலைமையில் “மதவாத அரசியலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சங்க தலைவர் வழக்குரைஞர் பானுமதி, துணைத்தலைவர் வழக்குரைஞர் தமயந்தி மற்றும்
வழக்குரைஞர்கள் விஜயலட்சுமி,
கனிமொழி, சுதா, பாரதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.
கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
சென்னையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் கல்வி மத்திய பட்டியலில் இருக்க வேண்டும் என கருத்தை வலியுறுத்துகிறார். அதற்கு நமது முதல்வர் பதில் கொடுத்திருக்கிறார்.
தமிழக ஆளுநர் அரசியல்சட்ட வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அம்பேத்கர் வடிவமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது ஆனால் சட்டத் திருத்தத்தில் மத்திய அரசு பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றுவிட்டது. இதனை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் எதிர்த்து வருகிறது இதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.
பாராளுமன்றத்தில் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட இந்த பிரச்சனையை வெறும் அலங்கார பதவியில் இருக்கிற ஒரு ஆளுநர் கருத்தை சொல்வதற்கு தகுதியற்றவர். அவருக்கு உரிமையும் கிடையாது. தமிழக கவர்னர் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை கொடுத்திருக்கிறது சுமார் 30 ஆண்டு காலமாக எந்த குற்றம் செய்யாமல் சிறையில் இருக்கிறார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்பு பிணை கொடுக்கப்பட்டிருக்கிறது வரவேற்கத்தக்கது.
மற்ற ஆறு பேருக்கும் பிணையும், விடுதலை கிடைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக இஸ்லாமிய சகோதரர்கள் சிறையில் உள்ளனர் அவர்களையும் விடுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து
கேள்விக்கு பதிலளித்த பழநெடுமாறன்
பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

1983ம் ஆண்டு முதல் சிங்கள கடற்படையினர் நமது தமிழக மீனவர்களை வேட்டையாடி வருகின்றனர். இதுவரை 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் மீனவர்களின் படகுகள், அவருடைய வலைகள், பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நமது மீனவர்களை பாதுகாப்பதற்கு இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுவரை சிங்கள
கடற்படைக்கு எதிராக இந்திய கடற்படையினர் எந்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதற்கு காரணம் என்ன? இதுவரை தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக கருதப்படவில்லை என்பதுதான் அர்த்தம்
என்றைக்கு தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக கருதவில்லையோ அதற்கு பிறகு நாம்
யார் என்று முடிவு செய்யும் கட்டம் வந்துவிட்டது.
தமிழக மக்கள் உரிய முடிவு எடுப்பார்கள் என்று இந்திய அரசிற்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல.
இது எதர்ச்சி அதிகாரப் போக்கிற்கு நாட்டை அழைத்துச் செல்லும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை மாற்ற நினைப்பது மக்கள் கொடுத்த தீர்ப்பை மாற்றி அமைப்பதாகும்.
மக்களை ஐந்து ஆண்டு காலத்திற்கு ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். இந்த தீர்ப்பை மீறி மத்திய நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் தேர்தல் என்பது எதர்ச்சி அதிகாரப் போக்கிற்கு நாட்டை அழைத்துச் செல்லும்.
4 மாநில தேர்தலில் பாஜக வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆட்சி அதிகாரம், அவரிடம் இருக்கின்ற பணபலம் எல்லாவற்றையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். அதற்கு மேலாக எதிர்க்கட்சியின் ஒற்றுமையின்மை மிக முக்கிய காரணமாகும்.
பாஜகவுக்கு எதிராக ஒரு அணி உருவாக்கப்பட வேண்டும்.
ஒரே நாடு , ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் ஹிந்து, என்ற கோட்பாட்டிற்கு எதிரான கோட்பாட்டை முன் வைப்பதுதான் அதை எதிர்ப்பதற்கு வழிவகுக்கும் அதற்கு எதிரணியினர் முன்வராதது வருந்தத்தக்கதாகும்.
மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி, அதிகாரம்
மத்திய ஆட்சிக்கு சில குறிப்பிட்ட அதிகாரம் இருக்கும் என்ற வகையில் ஒரு புதிய அரசியல் சட்டத்தை வகுப்பதற்க்கான
புதிய அரசியல் நிர்ணய சபையை
உடனே கூட்ட வேண்டும். அவ்வாறு கூட்டி அதில் கூட்டாட்சி நடைமுறையை ஏற்றுக்கொள்கிற அரசு அரசியல் சட்டத்தை வகுப்போம் என்ற சட்டத்தை எல்லா மாநில அரசுகளும் முன்வைத்து ஒரு கூட்டணி அமைக்க வேண்டும். அதுதான் பாஜகவுக்கு மாற்று அணியாக இருக்க முடியும். எனவே அதை செய்வதற்கு முன் வரும்படி அனைத்து மாநிலக் கட்சிகளையும் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
