மாவட்ட செய்திகள்
திமுக அமைச்சர் கீதாஜீவனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி அருகே கிராம மக்கள் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்.

திமுக அமைச்சர் கீதாஜீவனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி அருகே கிராம மக்கள் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் அமைந்துள்ள இளையரசனேந்தல் குறுவட்டம் உள்ளிட்ட 12 கிராமங்களை தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா உடன் இணைப்பதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தில்
ஒருங்கிணைப்பாளர்
தேசிய விவசாயிகள் சங்கம் ரெங்கநாயகன் தலைமையில் வழக்கறிஞர் அய்யலுசாமி முன்னிலையில் கிராம மக்கள் அமைச்சர் கீதாஜீவன் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தலையில் முக்காடு போட்டு கொளுத்தும் வெயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் அமைச்சர் கீதாஜீவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா வில் இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 கிராமங்களை தொடரச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்காவிட்டால் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
