மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்ததால் விவசாயிகள் பாதிப்பு.
தஞ்சை மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி சாகுபடி சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள நிலையில் நடவு பணியின் போது மழை பெய்து அதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மறு நடவு செய்து விவசாயிகள் நெல் பயிர்களைப் பாதுகாத்து வந்தனர் இந்நிலையில் தற்போது அறுவடைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் 60 சதவீத அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன இன்னும் 40 சதவீத இந்தப் பயிர்கள் அறுவடை செய்ய வேண்டியுள்ள நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சார்ந்துள்ளன இதே நிலை தொடர்ந்து நீடித்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் எனவும் வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் பாதிப்படைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை