மாவட்ட செய்திகள்
கேள்வி போது மீண்டும் திங்கள்,புதன்,வெள்ளி REPEATE திங்கள்,புதன்,வெள்ளி REPEATE. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். பொய் வழக்கு போட்டு அடக்கி விடலாம் என்று நினைத்தால் பூனை பகல் கனவு கண்டதுபோல அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. பொய் வழக்குப் போட்டு கழகத்தை அழித்துவிடலாம் என்று நினைத்தால் அது சாத்தியமில்லை. வழக்குகள் இருப்பவர்கள் மட்டுமே திமுகவில் இருக்க முடியும் ஸ்டாலினே கூறுகிறார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சிறந்த தலைமை தேவைப்படுகிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்:-

அது தவறான கருத்து 1996ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா தலைமையில் வழுவான தலைமை இருந்தது. அப்போதும் கருணாநிதி வழக்கு போட்டார். தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் சிறப்பாக கட்சியை வழிநடத்தி வருகின்றனர். அரசியலில் வெற்றி தோல்வி என்பது நாணயத்தின் இருபக்கம் போன்றது. சட்டமன்றத் தேர்தலில் 3% வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது.
கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அது தவறு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் சகோதரர் ராஜாவை கூட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என கூறினார் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது போதும் போதும் மீண்டும் புதன், வெள்ளி வருவேன், அடுத்த வாரம் திங்கள், புதன், வெள்ளி வருவேன் எனவே ரிப்பீட், ரிப்பீட் அப்ப பாத்துக்கலாம் என்று கூறி முடித்தார்.

விஜயகுமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும் பொழுது உடன் வந்த முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி,
மற்றும் தொண்டர்கள் காவல் நிலையம் என்று பாராமல் அத்துமீறி 100க்கும் மேற்பட்டோர் உள்ளே காவல் துறையையும், தமிழக அரசின் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
