மாவட்ட செய்திகள்
திருப்பூரில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலையை பாதுகாக்க , குடியிருக்க இடம் பெற , நலவாரியம் ஆக செயல்படுத்திட , ஓய்வூதியம் பெற ஆகிய கோரிக்களை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோஷங்களை எழுப்பி கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியை குறைக்கக்கூடாது , ஆண்டுக்கு ஒரு நபருக்கு 200 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் , நாளொன்றுக்கு குறைந்த பட்சமாக ஆறு நூறு ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் , வேலை செய்த நாட்களுக்கான சம்பள பாக்கியை உடனே வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்களை முன்வைத்தனர்.
அதேபோல் விவசாயத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும் , இலவச வீட்டுமனைப்பட்டா கோரிய விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.