மாவட்ட செய்திகள்
சேலம் ஏற்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தேமுதிக மாவட்ட செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் தலைமையில் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் போராட்டம்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வட்டார வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தேமுதிக மாவட்ட செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் தலைமையில் இன்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தேமுதிக சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்காடு பகுதிகளில் கிணறு வெட்டுவதில் ஊழல் மற்றும் ஒண்டிகடை பகுதியில் வணிக வளாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் . மற்றும் கழிப்பிடம் கட்டுவதில் ஊழல் தொகுப்பு வீடு கட்டுவதில் ஊழல் இதற்கெல்லாம் துணைபோகும் வட்டார வளர்ச்சி அலுவலர் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மனு கொடுத்தனர் அவர் அதற்கு தேமுதிக நீங்கள் எப்பொழுது ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுது என்னிடம் வந்து பேசுங்கள் என்று இழிவாக சொல்லியுள்ளார் மற்றும் ஒருமையில் பேசியதால் இன்று அவரை கண்டித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவரை இப்பகுதியில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் ஏற்காடு ஒன்றிய செயலாளர். சுரேஷ்குமார் .தலைமை தாங்கினார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கையூட்டு பெற்றுக்கொண்டு திட்டங்களை செயல்படுத்த வில்லை என்று முழக்கமிட்டனர்.

மேலும் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் காமராஜ் ஒன்றிய அவைத்தலைவர் வரம்பன் ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் ஒன்றிய துணைச் செயலாளர் சசிகுமார் மற்றும் குமார் மாவட்ட பிரதிநிதி சதீஷ்குமார் சென்றாயன் குணசேகரன் மோகன்ராஜ் அன்பழகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின்போது கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
