மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமைந்துள்ள 900 ஆண்டு பழமையான அர்ஜுனேஸ்வரர் திருக்கோவிலுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள், சுவாமி தரிசனம் செய்து, கோவிலின் வரலாற்றை கேட்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள 900 ஆண்டு பழமையான அர்ஜுனேஸ்வரர் திருக்கோவிலுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள், வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து, கோவிலின் வரலாற்றை கேட்டிருந்தார். திருக்கோவில் சார்பாக கோவில் நிர்வாகிகள் அவருக்கு கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். கோவிலின் அர்ச்சகர் நாகராஜன் சுவாமிகள் கோவிலின் வரலாற்றை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன் மற்றும் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலவேணி கலையரசு, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மோகன், மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
