மாவட்ட செய்திகள்
உடுமலையில் வெயிலுக்கு தர்பூசனி, கடைகளைதேடும் பொதுமக்கள்.

இந்த ஆண்டு மார்ச் முதல் வாரமே கோடை வெய்யில் தொடங்கி விட்டது. இதனால் கடுமையான வெய்யிலில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெய்யிலை தாக்குப் பிடிக்க முடியாத மக்கள் கொஞ்சம் வெப்பத்தை தணிக்க முடியாதா என்ற நிலையில் உள்ளனர்.

கோடை ஆரம்பித்தவுடன் நகரில்
ஆங்காங்கே ஏராளமான தர்பூசனி மற்றும் நுங்கு என சாலையோரக் கடைகள் முளைத்து விட்டன. குழந்தைகள் முதல் பெண்கள் மற்றும் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு சாலையோர கடைக்குள் சென்று தர்பூசனி மற்றும் நுங்குவை சுவைக்காத ஆட்களே இல்லை என்று கூட சொல்லலாம். பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிக அளவில் நுங்குகள் உடுமலைக்கு கொண்டு வரப்படுகின்றன.

உடுமலை பகுதிக்கு கொண்டு வரப்படும் நுங்கு, பதநீர், பணங்கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. பொதுமக்கள் உடல் சூட்டையும், வெப்பத்தையும் தணிக்கவும், தர்பூசனி மற்றும் நுங்குவை அதிகமாக விரும்பி சாப்பிடுகி ன்றனர். இதனால் தர்பூசனி மற்றும் நுங்கு, நுங்கு சார்ந்த பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
