BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காம கொடூரன் !

சென்னை தாம்பரத்தை அடுத்து உள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் 16 வயது சிறுமி இவர் அதே பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த சிறுமிக்கு சில நாட்களாக வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் பரிசோதனை முடிவில் சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை செய்ததில் இதற்கு பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் ஆண்ட்ரோ காரணம் என தெரியவந்தது.

ஆண்ட்ரோவுக்கு வயது 20 எனவும் அவர் மெக்கானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் மேலும் அவர் இரண்டு மாதங்களுக்கு முன் அவர் வீட்டுக்கு யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தற்போது அவரை காவலர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )