BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மாணவிகளை குறிவைத்து போதை மருந்து விற்பனை: சிக்கியது காதல் ஜோடி.

மாணவிகளை குறிவைத்து போதை மருந்து விற்பனை: சிக்கியது காதல் ஜோடி

சென்னையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை, கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்து வந்த காதல் ஜோடி உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதை பொருள்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. போதை பொருள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோடம்பாக்கம் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நித்தீஷ் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவது காவல்துறைக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ட்ரஸ்டுபுரம் மைதானம் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறையினர், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அசோக் நகரை சேர்ந்த கிஷோர் (23), கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர் குமார் (20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் என்பதும், அவற்றை போதைக்காக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கொத்தவால் சாவடி பகுதியில் இதேபோல் வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த பூந்தமல்லியைச சேர்ந்த பட்டதாரி பெண் ராஜேஷ்வரி (22), கொத்தவால் சாவடி பகுதியை சேர்ந்த பூங்குன்றன் (26), கோகுல் (24) மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரியின் காதலன் முத்துப்பாண்டி (21) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜேஷ்வரி இக்கும்பலுக்கு தலைவியாகவும், மூளையாகவும் செயல்பட்டு வந்துள்ளார். ராஜேஷ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன் கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்தியுள்ளார். மீதமுள்ள மாத்திரைகளை கல்லூரி மாணவிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்துள்ளார். பின்னர் அதையே முழு தொழிலாக செய்து வந்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )