மாவட்ட செய்திகள்
திருப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளங்கி வலசு கிராமப்பகுதியில் என்று வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றன.
இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு சென்று காய்ச்சல், சளி, இருமல் ஆகிய தொந்தரவுகள் உள்ளனவா? எனவும், மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், அருகிலுள்ள கணியூர் மற்றும் துங்காவி அரசு துணை சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுமக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகள் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்