BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய மத்திய மண்டல ஐஜி.

தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய மத்திய மண்டல ஐஜி யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக சாட்சி கூறும் படி தெரிவித்துச் சென்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தஞ்சை வடக்கு வாசல் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். வழக்கில் அவரது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவரது குடும்பத்திற்கு ஏற்கனவே 8 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி காவல் துறை மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மகளுக்கு பட்டுக்கோட்டையில் மகளிர் விடுதியில் சமையல் வேலை வாங்கிக் கொடுக்கப் பட்டது.

இந்நிலையில் அவரது இன்று குடும்பத்தினரை நேரில் சந்தித்த திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சாவூர் எஸ் பி ரவளிபிரியா ஆகியோர் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் புடவை மற்றும் குழந்தைகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகம் எழுதுபொருள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மனுவையும் பெற்றுக்கொண்டு இன்று முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். கொலை வழக்கில் தைரியமாக சாட்சி கூறும் படியும் காவல்துறை உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )