BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடு  பட்லூர் சொக்கநாத மலையூர் கிராம மக்கள் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வரவில்லை எனக்கூறி வெள்ளித்திருப்பூர் பவானி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட பட்லூர் சொக்கநாத மலையூர் கிராம மக்கள் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வரவில்லை எனக்கூறி வெள்ளித்திருப்பூர் பவானி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி குகநாதன் பட்லூர்ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் பவானி வெள்ளித்திருப்பூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )