மாவட்ட செய்திகள்
தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணியை மேயர் சண்.ராமநாதன் தொடங்கிவைத்தார்.
தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை தெரசா மக்கள் சேவை மையம் ஸ்வஸ்தி கோத்ரேஜ் கிவ்இந்தியா தாரஸ் ஆகிய நிறுவனங்கள் தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது முக கவசம் அணிவது தனிநபர் இடைவெளியை கடை பிடிப்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்தி சுகாதார விழிப்புணர்வு பேரணியை நடத்தியது இந்த பேரணியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் முன்னிலை வகித்தார் இப்பேரணியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கண்டு விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றனர்.
இப்பேரணியில் மாநகர நல அலுவலர் மருத்துவர் நமசிவாயம் ஸ்வஸ்தி மண்டல திட்ட மேலாளர் ரத்தினகிரி அன்னைதெரசா மக்கள் சேவை மையம் தலைவர் நிர்மலா செயலாளர் இந்திரா பொருளாளர் ஜெயலட்சுமி மேலாளர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.