மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடகரையில் தனியார் திருமண மண்டபத்தில் பாலின சமத்துவமே நிலையான எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடகரையில் தனியார் திருமண மண்டபத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மற்றும் சர்வோதீப் எழுச்சி பெண்கள் இணைப்புக் குழு சேர்ந்து நடத்திய பாலின சமத்துவமே நிலையான எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் சுமிதா தலைமை வகித்தார்.

இந்த கருத்தரங்கில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் சமத்துவம் பெறவேண்டும், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு துணிந்து போராட வேண்டும், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுத்து நிறுத்த பெண்கள் முன்வர வேண்டும், பெண்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேறினாலும் என்னும் தாழ்வு மனப்பான்மையால் பலதரப்பட்ட நிலைகளில் பெண்கள் அடிமை தனத்தோடு இருப்பதை உணர்ந்து மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது. இந்த மகளிர் தின கருத்தரங்கில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் பங்கேற்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க முதலில் பெண்கள் முன்வர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு அதற்கான சட்ட வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த மகளிர் தின கருத்தரங்கில் பெரியகுளம்
அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
