மாவட்ட செய்திகள்
பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வளாகம் முன்பு உயர் மின் கோபுர விளக்கு அமைப்பதற்காக பூமிபூஜை.
பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வளாகம் முன்பு உயர் மின் கோபுர விளக்கு அமைப்பதற்காக பூமிபூஜை நடைபெற்றது
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வராக நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் கோவில் வளாகம் முன்பு போதிய அளவு மின்விளக்கு வசதி இல்லாததால் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரிந்துரையின்படி தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.70 லட்சம் ரூபார் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டனர்.
அதற்கான பணிகள் தொடங்குவதற்காக அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோவில் வளாகம் முன்பு அதிமுக கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றன இதில் முன்னாள் முதல்வர் OPS-யின் சகோதரரான 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அதிமுக நகர செயலாளர் ராதா கோவில் பராமரிப்பு குழு சிதம்பரம் சூரிய வேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.