மாவட்ட செய்திகள்
ஒன்றிய மோடி அரசிடம் இருந்து நாட்டை காப்போம், நாட்டு மக்களை காப்போம்.

ஒன்றிய மோடி அரசிடம் இருந்து நாட்டை காப்போம், நாட்டு மக்களை காப்போம்.
இன்று 20.03.2022 காலை 10 மணிக்கு, தஞ்சை மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட்-லெனினிஸ்ட்) நகர குழு உறுப்பினர் N.V.கிட்டப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்:
ஒன்றிய அரசை கண்டித்து 2022 மார்ச் 28 மற்றும் 29 ம் தேதிகளில் அகில இந்திய இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அதில் கட்சியின் நகரகுழு சார்பில், 2022 மார்ச் 28 அன்று காலை 9 மணிக்கு, தஞ்சை மாநகர செயலாளர் தோழர். S.M.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவதெனவும், இப்போராட்டத்தில் கட்சியின் தோழர்கள் அனைவரும் கலந்துகொள்வதெனவும் முடிவுசெய்யப்பட்டது.
கூட்டத்தில் கீழ்கணட
நகரக்குழுதோழர்கள் கலந்துகொண்டனர். சூரி.ரவிச்சந்திரன். F.டேவிட.
பெட்ரிக் ஜெயக்குமார். DR.பழனி.செல்வகுமார்.ஜி.ராஜரெத்தினம். ஆர்.கே.ரவிச்சந்திரன். Er.ஆர்.மணிபாரதி. ஆர்.அருளப்பன். S.கணபதி. S.அன்வர்உசேன். T.குருமூர்த்தி. எம்.மோகன். Er.A.முகிலன். கே.பாலசந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்ட முடிவில் ஒன்றிய செயலாளர் F.டேவிட் நன்றி கூரினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
