மாவட்ட செய்திகள்
திருச்சியில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் உட்பட பல்வேறு கோயில்களில் சசிகலா இன்று சாமி தரிசனம்.

தமிழகம் முழுவதும் சசிகலா கடந்த 1மாதமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி செய்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அங்கு இருந்து திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் அருகில் உள்ள அக்கறைபட்டி சாய்பாபா கோயில் திருச்சி உறையூரில் உள்ள வெக்காளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். காலை திருவானைக்காவல் கோவிலுக்கு வருகை தந்த சசிகலாவை முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
