மாவட்ட செய்திகள்
செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அருந்ததி இன மக்கள் சாகும் வரை பட்டினி போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் பகுதியில் வசித்து வரும் அருந்ததி இன மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர் .

அவர்கள் குடியிருக்கும் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதி எனக்கூறி பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் இருந்த வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செங்கம் வட்டாட்சியரிடம் மாற்று இடம் வழங்கக்கோரி குடிநீர் சாலை மின் இணைப்பு ஆகியவை வழங்க வேண்டுமென்று பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குழந்தைகள் பெரியவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் சாகும்வரை பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது அவர்கள் கூறுகையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை பட்டினி போராட்டம் தொடரும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
