BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்குன்றத்தில் 178 பயனாளிகளின் ரூ. 75 இலட்சம் மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி.

பொதுமக்கள் அரசு கூட்டுறவு வங்கிகளில் வைத்திருக்கக் கூடிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு கூட்டுறவு வங்கிகளில் வைத்திருக்கக் கூடிய நகைகடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு செய்தார்.

அதனடிப்படையில் மாதவரம் தொகுதி செங்குன்றம் பகுதியில் உள்ள சைதை தாலுகா கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்த 178 பேரின் ரூ. 75 இலட்சத்திற்கான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகளும், இரசீதும் வழங்கும் நிகழ்வு செங்குன்றத்தில் நடைபெற்றது. மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளருமான மாதவரம் S.சுதர்சனம் கலந்து கொண்டு நகைகளையும் இரசீதையும் வழங்கினார். இதில் செங்குன்றம் பேரூர் கழகச் செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், திமுக அவைத்தலைவர் ஜெ.ரகுகுமார், துணைச் செயலாளர் எஸ்.முனீஸ்வரி சுகுகுமார், ஒன்றிய பிரதிநிதிகள் கே.கோபால், சுந்தரம், கே.கபிலன், கவுன்சிலர்கள் எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், கா.கு.இலக்கியன், என்எம்டி. இளங்கோவன், கே.கோதண்டராமன், கூட்டுறவு சொசைசைட்டி நீதிராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )