மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாலை நேர காய்கறி அங்காடிக்கு மின் வசதி செய்து தர மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியூசி கோரிக்கை!

தஞ்சாவூர் மாலை நேர காய்கறி அங்காடிக்கு மின் வசதி செய்து தர மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியூசி கோரிக்கை!!! தஞ்சாவூர் காவிரி சிறப்பங்காடி அருகில் உள்ள மாலை நேர காய்கறி அங்காடி சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. அப்போது பொறுப்பிலிருந்த நகராட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைத்து மண் மேடாக இருந்த கடைகளை ,சிமெண்ட் தரை தளம் ,மேற் கூரை போடப்பட்டுள்ளது. தினமும் அங்கு நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். ஏராளமான பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கு வருவதால் சிறுநீர் கழிப்பதற்கு இடமில்லாது மிகவும் சிரமப்படுகின்றனர். அத்துடன் சுகாதாரமான குடிநீர் வசதியும் இல்லை. மாலை நேரங்களில் மின் வசதி இல்லாததால் ஜெனரேட்டர் வைத்து மின் வசதியை அந்தப் பகுதியில் வியாபாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர், ஜெனரேட்டர் மின்வசதிக்கு வருமானத்தில் பாதி செலவாகிறது . ஆதலால் நீண்ட நாள் கோரிக்கையான மின் வசதி ,கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்து தரவும், அத்துடன் கொரான காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடை வாடகை வசூலை நகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் வந்து கடை வாடகை வாங்கிக்கொண்டு ரசீது அளிக்கும்படியும் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விண்ணப்பம் நேற்று மாலை அளிக்கப்பட்டது. ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, தலைமையில் மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன், சங்க நிர்வாகிகள் எம். பாலமுருகன், ரவி உள்ளிட்டோர் கோரிக்கை மனுவினை அளித்தனர் .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
