மாவட்ட செய்திகள்
நாட்டில் வேலை இல்லாத நிலையை உருவாக்குவோம்!மாவீரன் பகத்சிங் 92 ம்ஆண்டு நினைவு நாளில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உறுதியேற்பு!

நாட்டில் வேலை இல்லாத நிலையை உருவாக்குவோம்! மாவீரன் பகத்சிங் 92 ம்ஆண்டு நினைவு நாளில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உறுதியேற்பு!! பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், தொழிலாளர்கள், விவசாயிகள் தலைமையில் சோசலிச குடியரசை நிறுவிடவும் தனது இறுதி மூச்சுவரை போராடி உயிர் நீத்த தோழர்கள் பகத்சிங், சுகதேவ்,ராஜகுரு உள்ளிட்ட தோழர்களின் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தெற்கு மாவட்ட தலைவர் மருத்துவர் ச.சுதந்திர பாரதி தலைமையில் நடைபெற்றது..மாவட்ட செயலாளர் க.காரல் மார்க்ஸ், மாவட்ட. துணை தலைவர் ஆர்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி நாட்டின் விடுதலைக்காக போராடிய, சோசலிச குடியரசு நிறுவிட நவ யுவ ஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி, இந்துஸ்தான் சோசலிச குடியரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்களிடம் அமைப்பினை விரிவாக்கி போராடி வந்தவர். நாட்டின் மிகப்பெரும் சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராய், ராபின் பிகாரி போஸ், புரட்சியாளர் சந்திரசேகர ஆசாத் உள்ளிட்ட தேசப்பற்று உறுதிகொண்ட தலைவர்களிடம், தோழர்களிடம் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை பிரிட்டிஷ் அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது தொழிலாளர்களுக்கான விரோத சட்டத்தை 92 ஆண்டுகளுக்கு முன்பே கடுமையாக எதிர்த்து பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி நியாயங்களை எடுத்து வைத்தவர், நாட்டிலேயே முதன் முதலாக புரட்சி ஓங்குக என்ற முழக்கத்தை பிரதிபலிக்கும் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை நாடெங்கும் ஒலிக்க செய்தவர் தோழர் பகத்சிங். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட புரட்சியாளர்களின் போராட்டங்களை குறித்து மாவட்ட செயலாளர் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மாணவர் மன்ற நிர்வாகிகள் டி.செந்தில்குமார், எஸ்.விஷ்ணு தேவ், தேவி, ஏ.ஹரிஹரன், ஆர். நவீன் , பி.செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜி.கிருஷ்ணன் என்.பாலசுப்பிர மணியன், மாநகர செயலாளர் ஆர். பி.முத்துகுமரன், தொழிற்சங்க நிர்வாகிகள் துரை.மதிவாணன், பி.செல்வம், எஸ்.தியாகராஜன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பகத்சிங் நினைவு நாளில் தமிழ்நாடு உள்ளிட்டு போதை பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள், மாணவர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது, குடும்ப நலன், எவ்வித சமூக அக்கறையும் இல்லாத, அனைத்து விரோத செயல்களில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பெருகிவரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும், நாட்டில் படித்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை முழுமையாக அளித்துவிடவும், படிக்காத இளைஞர்களுக்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்பு அளித்திடவும் கோரிக்கை வைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கையை கைவிடவும் , கிராமப்புற ஏழை எளிய தமிழ்நாட்டின் படித்த மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கின்ற நீட் தேர்வை ரத்து செய்யவும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தையும் தாய்மொழி தமிழிலேயே வழங்கிடவும் ,வறுமை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்கிட, தொழிலாளர்கள், விவசாயிகள் தலைமையிலான சோசலிச குடியரசை நிறுவிட உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க பகத்சிங்கின் நினைவு நாளில் உறுதி யேற்க்கப்பட்டது. துரை.மதிவாணன்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
