மாவட்ட செய்திகள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் செயல்படாத நவீன எக்ஸ்ரே மையம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் செயல்படாத நவீன எக்ஸ்ரே மையம். பொதுமக்கள் அவதி.
யானை வாங்கிக்கொடுத்த தன்னார்வலர்கள். சங்கிலி வாங்க முடியாத அரசாங்கம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். குறிப்பாக ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இங்கு ஏழை எளிய மக்களுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக ரோட்டரி சங்கம் மூலமாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன எக்ஸ்ரே இயந்திரம் வழங்கப்பட்டது. மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கு பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. மேலும் இங்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு பல நூறு செலவு செய்து தனியார் எக்ஸ்ரே மையத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுக்கும் நிலைமை உள்ளது. தன்னார்வ அமைப்புகள் மூலம் வாங்கிக் கொடுக்கப்பட்ட நவீன எக்ஸ்ரே இயந்திரம் செயல்படாமல் வைத்திருந்தால் கூடிய விரைவில் பழுதடையும் சூழ்நிலை உள்ளது.

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் வலுத்து வருகிறது.
யானை வாங்கி கொடுத்தாச்சு. சங்கிலி வாங்குவதற்கு அரசாங்கத்தால் முடியவில்லை என்று பல தன்னார்வலர்கள் வேதனை அடைந்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
