மாவட்ட செய்திகள்
வடபழனி முருகன் கோயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை.

வடபழனி முருகன் கோயிலில் பிரசாத விற்பனை நிலையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். தரமற்ற முறையில் தயாரித்த 15 லட்சம் மதிப்புள்ள பிரசாதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு, வடை, அதிரசம், முருக்கு, உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்கப்படும் பிரசாதங்கள் தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை வடபழனி கோயிலில் உள்ள பிரசாதம் விற்பனை நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள லட்டு, அதிரசம், முருக்கு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் வடபழனி சாஸ்திரி நகரில் உள்ள பிரசாதம் தயாரிக்கும் இடத்திற்கு சென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது உணவு பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பிரசாதம் தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரசாதம் தயாரிக்கும் இடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்து சம்மந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
