BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பிஷப் ஹீபர் கல்லூரியில் இலக்கியம், மொழி மனம் தலைப்பின் கீழ் 3நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கலை கல்வியியல் புலம் சார்பில் இலக்கியம், மொழி, மனம் சார்ந்த சிந்தனை என்ற தலைப்பின் 3நாட்கள் காணொளி கருத்தரங்கு நடைபெற்றது இதில் தமிழ், ஆங்கிலம். ஹிந்தி. சமஸ்கிருதம், பிரஞ்ச் ஆகிய மொழித் திறன், இலக்கியத் திறன் உள்ளிட்டவை குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இக்கருத்தரங்கில் சாகித்திய அகடமி விருது பெற்ற பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத் துறை பேராசிரியர் முனைவர். பூரணச்சந்திரன், ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் ஷோபனா, அறிவியல் துறை முனைவர் வயலட்தயாபரன், தமிழாய்வுத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் டென்னிசன், பிறமொழி துறைகளின் ஒருங்கிணைப்பாளர்முனைவர் சாந்தி, மற்றும் இளங்கலை முதுகலை மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )