BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்டம் மாவட்ட ஒருங்கிணைந்த அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில் நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் கொரனோ நோயினை தடுக்கும் விதமாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனைகளும் தடுப்பூசி செலுத்தாதவர்களை எவ்வாறு அனுகி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மேலும் தேனி மாவட்டத்தை 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கிடவும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வினை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தும் விதமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )