மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டத்தில் இயல்பு மழையை விட சராசரி மழைப்பொழிவு குறைவு. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தேனி ஆட்சியர் தகவல்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட வனத்துறை அதிகாரி வித்யா, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் முன்னிலையில் வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் விவாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்பு.
கோடை காலங்களில் வனங்களில் மட்டுமல்லாது விவசாய நிலங்களில் ஏற்படும் தீ விபத்தை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் தீ தடுப்பு இளைஞர் குழுக்களை உருவாக்கவும், தேனி மாவட்ட வேளாண் துறை சார்பில் நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை வாங்கி விவசாயிகளுக்கு உதவவும் உள்

ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, “நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களின் சராசரி மழை அளவான 113.1 மிமீ., க்கு பதில் இதுவரை 35.56 மி.பி., மழையே கிடைத்துள்ளது. இது இயல்பு மழையைவிட 79.54 மி.மீ., குறைவாகும் எனவும், இந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவான 59.2 மி.மீ., க்கு பதில் தற்போது வரை 6.58 மி.மீ., மழையே கிடைத்துள்ளது.

இது சராசரி இயல்பான மழை அளவைவிட 52.62 மி.மீ., குறைவாகும். எனவே விவசாயிகள வருங்காலங்களில் தண்ணீரை சிக்கனமாக மேம்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது:.எனவே விவசாயிகள் சொட்டுநீர் பாசன மானியத் திட்டத்தில் விண்ணப்பித்து அதன் மூலம் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
