மாவட்ட செய்திகள்
நல்லூர் ஊராட்சி காந்திநகரில் இலவச கண் பரிசோதனை முகாம்.

செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி காந்திநகரில் உள்ள அன்னை மஹாலில் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் செங்குன்றம் கிளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் செங்குன்றம் கிளை மேலாளர் சையத் ஜமால் தலைமையில் நடைபெற்றது.
உதவி பொது மேலாளர் விமல் முன்னிலை வகித்தார்.
முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக ரெப்கோ மைக்ரோ பைனான்ஸின் இயக்குனர் வெங்கடாசலம் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து டாக்டர் அகர்வால் மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து கண்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறினர்.
இதில் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிர்வாகிகள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
