BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் உள்ள நகைக் கடையில் மர்ம நபர் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் கமல் சந்த் ஜெயின் என்பவர், வீட்டின் முன்பகுதியில், ஜெயின் ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு நகை கடையை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்த போது நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கமல் சந்த் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கிழக்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )