மாவட்ட செய்திகள்
சோழவரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்.

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடை பெற்றது.

துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், குடிநீர் மோட்டார்களுக்கு உதிரிபாகங்கள் வாங்குவது, தெருக்களில் உயர்தர மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வது குறித்து ஆலோசனைகளை கவுன்சிலர்களிடம் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
