BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது அவற்றை விவசாயிகள் அறிந்து நல்ல முறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்திட விவசாய பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள இந்தக் கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி கூறியதாவது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம்மற்றும் நிலக்கோட்டை வட்டம்ஆகிய இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன .இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் பயிர் காப்பீட்டு திட்டங்களில் அனைத்து விவசாயிகளும் உரிய நேரத்தில் இணைந்து பயன்பெற வேண்டும். தரிசு நிலங்களில் உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.இதன்மூலம் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட முடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.விசாகன் தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் விவசாயி களிடமிருந்து பட்டா ,பெயர் மாற்றம் ,தனிப்பட்டா வழங்குதல், சாலை வசதி வேண்டுதல், விவசாயகடன் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம், திட்டத்தில் வேளாண்மை உற்பத்தி குழு, வேளாண் பொருட்கள் உற்பத்தி குழு விவசாய உற்பத்தி மகளிர் குழு, விவசாய உற்பத்தியாளர் குழு, என 22 விவசாய குழுக்களுக்கு ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் வழங்கினார். பின்னர் வேளாண்மை உற்பத்தி மற்றும் குறைகளை களையும் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.விசாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மைப் பொருட்களை உற்பத்தி அதிகரித்து மற்றும் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, இணை இயக்குனர் (மேலாண்மை) பாண்டித்துரை, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் காந்தி நாதன், துணை இயக்குனர் (வேளாண்மை மாநில திட்டம்) சுருளி அப்பன், துணை இயக்குனர் (தோட்டக்கலை) பெருமாள் சாமி, தமிழ்நாடு அரசு புத்தாக்க திட்டம் வேல்முருகன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை)கோபி, வேளாண்மை துணை இயக்குனர் (விதை ஆய்வு) மாயகிருஷ்ணன் மற்றும் அலுவலக தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )