மாவட்ட செய்திகள்
எடப்பாடியை அடுத்த கோணமோரி பகுதியில் மருத்துவ பொருட்கள் ஏற்றிவந்த மினிவேன் நிலைதடுமாறி எதிரே இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

எடப்பாடியை அடுத்த கோணமோரி பகுதியில் மருத்துவ பொருட்கள் ஏற்றிவந்த மினிவேன் நிலைதடுமாறி எதிரே இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வேனில் இருந்த இருவரும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையில் கோணமோரி என்ற பகுதியில் உள்ள வளைவில் மருத்துவமனைகளுக்கு மருந்து ஏற்றி வந்த மினிவேன் நிலைதடுமாறி, எதிரே இருந்த பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அதிர்ஷ்ட வசமாக ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இதனையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொங்கணாபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் நிலை தடுமாறி விபத்து ஏற்ப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
