BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தாண்டவன்குளம் ஊராட்சியில் அருள்மொழி அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி மாணவர்களை டிசி வாங்காமலேயே மற்றொரு பள்ளியில் சேர்க்கும் அரசு கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தாண்டவன்குளம் ஊராட்சியில் அருள்மொழி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி 1955- ஆம் ஆண்டிலிருந்து தனிநபர் ஒருவர் இடத்தில் தனிநபர் ஒருவர் பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பள்ளியை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இப்பள்ளியை சிறப்பான முறையில் நடத்தி வந்த குடும்பம் அரசு ஒப்புதலின் படி அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது.

அருண்மொழி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் 2020-ஆம் ஆண்டு முதல் சுமார் 165 மாணவ மாணவிகள் பயின்று வந்த நிலையில், தற்பொழுது பள்ளி இயங்கிவரும் இடத்திற்கு சொந்தமான தனிநபர் தனது இடத்தை எங்களுக்கு கொடுக்குமாறும், பள்ளி இனி இயங்காது நாங்கள் இயங்க விடமாட்டோம் என்று அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மூலம் பல நெருக்கடிகள் கொடுத்து வந்தார்.

இடத்தை காலி செய்து பள்ளி இயங்காது வண்ணம் செயல்படுவதற்காக அரசு அதிகாரிகளிடம் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தாண்டவன்குளத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கு பணம் கொடுத்து சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுக்கு இப்பள்ளி இதே இடத்தில் இயங்க வேண்டும் தங்களது குழந்தைகள் நாங்கள் படித்த பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கடந்த சில வாரங்களாக முழக்கமிட்டு பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த நிலையில் வியாழக்கிழமை அன்று பெற்றோர்கள் ஊராட்சி மன்ற தலைவனிடம் எடுத்துக் கூறி எழுத்துப்பூர்வமாக அறிவித்து ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் 67 ஆண்டுகளாக இயங்கி வந்த பள்ளியை இங்கேயே இயக்கவேண்டும் பள்ளி மாணவர்கள் தற்போது 40 மட்டும் பயின்று வருகின்றார்கள். மற்ற மாணவர்களை ஆதார் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் சேர்த்துள்ளனர் என்று பள்ளியின் தாளாளர் கூறியுள்ளார்.

தாண்டவன் குளத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் பள்ளி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் பெற்றோர்கள் தங்களது இன் குழந்தைகள் வெகு தூரம் சென்று பள்ளிப்படிப்பு படிக்க முடியாத சூழல் உள்ளதால் உள்ளதால் கோபமடைந்து இப்பள்ளி இங்கேயே தங்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை மீன் கருவாடு அள்ளுவதற்கு மட்டும் தான் நீங்கள் லாயக்கு படிப்பு எதற்கு உங்களுக்கு நாங்கள் பாடம் நடத்த தயாராக இல்லை ஆகையால் வேறு ஒரு பள்ளியில் சேர்ந்து விடுங்கள் என்று அடித்து துன்புறுத்தி உள்ளார்கள். இதை மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரும் தெரிவித்துள்ளனர். இந்த மாதிரியான சூழ்நிலையை தற்போது நடக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி ஒப்புக் கொள்ளாது என்றும் இத்தகவலை முதல்வருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதும் தாண்டவன் குளத்து ஊராட்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )